பள்ளப்பட்டி நகராட்சிக்கு வரி செலுத்த வேண்டுகோள்
அரவக்குறிச்சி:பள்ளப்பட்டி நகராட்சிக்கு வரி செலுத்தாதவர்கள், சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகளை
நகராட்சிக்கு வரி செலுத்தாதவர்கள், சொத்து வரி, குடிநீர் கட்டணம்
உள்ளிட்டவைகளை செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சியில் மொத்தம், 27 வார்டு உள்ளது. 50,000க்கும் மேற்பட்ட
பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி,
தெரு விளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் நகராட்சியால்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2026--27ம் ஆண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர்
உடனடியாக நகராட்சியில், இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும்
வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக, உடனே நிலுவையில் உள்ள
வரித்தொகையை அலுவலகத்தில் செலுத்த வேண்டும். வரிகளை
செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள், உடனடியாக
துண்டிக்கப்படும்.
நகராட்சி மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்
என்ற உயர்ந்த எண்ணத்தை கருத்தில் கொண்டு, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய
சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, தொழில் உரிமை கட்டணம் ஆகிய
அனைத்து தொகையை வரும், 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, நகராட்சி
ஆணையர் அருண்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.