347 நாட்களுக்கு பின் கனமழையால் மகிழ்ச்சி

ஓசூர்; தமிழகத்தின் எல்லையிலுள்ள ஓசூர் நகரில், நடப்பாண்டு, 'எல்நினோ' பாதிப்பு காரணமாக பரு-வமழை பொய்த்து, நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. கிருஷ்ணகிரி வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர்வெல்கள் வறண்டு வருவதால், குடிநீர் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல், மாந-கராட்சி நிர்வாகம் தடுமாறி வருகிறது. குடிநீர் கேட்டு மக்கள், கவுன்சிலர்களை தொந்தரவு செய்யும் நிலையில், மாநகராட்சி கவுன்சிலர்-களே, கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலமை கடந்த வாரம்
சந்தித்து, குடிநீர் கேட்டு மனு வழங்கினர்.
பருவமழை பெய்தால் மட்டுமே, நிலத்தடி நீர்-மட்டம் உயரும் என்ற நிலையில், ஓசூர் பகு-தியில் கடந்த, 14 மற்றும் நேற்று முன்தினம் என, தொடர்ந்து இரு நாட்கள் மழை பெய்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஓசூரில் கடந்த, 347 நாட்களுக்கு பின், அதாவது பதினொன்றரை மாதங்களுக்கு பின், கனமழை பதிவாகி உள்ளது. கடைசியாக கடந்தாண்டு அக்., 3ம் தேதி அதிகபட்-சமாக, 120 மி.மீ., மழை பதிவானது. கடந்த மே, 31ம் தேதி, 42 மி.மீ., அளவிற்கு மிதமான மழை பதிவானது.
அதன் பின், குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு கனமழை பெய்யவில்லை. கடந்தாண்டு அக்., மாதத்திற்கு பின், 347 நாட்களுக்கு பின், நேற்று முன்தினம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி-களில், 71 மி.மீ., அளவிற்கு கனமழை கொட்டி-யது. நிலத்தடி நீர்மட்டம் பாதித்துள்ள நிலையில், கடந்த, 14ம் தேதி, 36.5 மி.மீ., நேற்று முன்தினம், 71 மி.மீ., என மழை பெய்து, விவசாயிகளை சற்று
ஆறுதலடைய செய்துள்ளது. மேலும் சில நாட்க-ளுக்கு மழை பெய்தால், மானாவாரி சாகுபடி பயிர்கள் தப்பிக்கும் என,
விவசாயிகள் கூறுகின்றனர்.