தமிழ்நாடு விவசாயிகள் சங்க மண்டல கருத்தரங்கம்
தர்மபுரி:தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மண்டல கருத்தரங்கம் தர்மபுரியில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், 31வது மாநில மாநாடு செப்., 27 முதல், 29ம் தேதி வரை தூத்துக்குடியில் நடக்க உள்ளது. இதையெட்டி, மண்டல அளவிலான கருத்தரங்கம், தர்மபுரியில் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணகிரி பிரகாஷ், சேலம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.