தேயிலை ஏலத்தில் 28.32 லட்சம் கிலோ விற்பனை ரூ.37 கோடி மொத்த வருவாய்
குன்னூர்: தென் மாநில தேயிலை ஏலங்களில், 28.32 லட்சம் கிலோ தேயிலை விற்பனையாகி ரூ.37 கோடி மொத்த வருவாய் கிடைத்தது.
தென் மாநில தேயிலை ஏலங்களில், 28.32 லட்சம் கிலோ தேயிலை விற்பனையாகி ரூ.37 கோடி மொத்த வருவாய் கிடைத்தது.
தென் மாநில அளவில் குன்னூர் டீசர்வ் கோவை, கொச்சி ஆகிய மையங்களில் 36-வது தேயிலை ஏலம் கடந்த 31-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை 4 நாட்கள் நடந்தது.
இந்த ஏலத்திற்கு மொத்தம் 33.65 லட்சம் கிலோ தேயிலை விற்பனைக்கு வந்த நிலையில், 28..32 லட்சம் கிலோ தேயிலை விற்பனையானது. நான்கு மையங்களையும் சேர்த்து, 37 கோடி ரூபாய் மொத்த வருவாய் இருந்தது.
குன்னூர் : 17.78 லட்சம் கிலோ வந்ததில், 16.90 லட்சம் கிலோ என 95.05 சதவீதம் விற்பனையானது. சராசரியாக கிலோவிற்கு ரூ.119.97 விலை கிடைத்தது. மொத்த வருவாயாக 20.28 கோடி ரூபாய் ஈட்டப்பட்டது.
டீசர்வ்: 1.18 லட்சம் கிலோ வந்ததில் 1. 06 லட்சம் கிலோ என 90.12 சதவீதம் விற்பனையானது; சராசரியாக கிலோவிற்கு ரூ.107.52 விலை கிடைத்து, மொத்த வருவாயாக 1.14 கோடி ரூபாய் கிடைத்தது.
கோவை: 4.84 லட்சம் கிலோ வந்ததில், 3.06 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரியாக கிலோவிற்கு ரூ.126.94 விலை , கிடைத்தது. மொத்த வருவாய் 3.89 கோடி ரூபாய் என இருந்தது.
கொச்சி: 9.85 லட்சம் கிலோ வந்ததில், விற்பனையான 7.30 லட்சம் கிலோ விற்றது; சராசரியாக கிலோவிற்கு ரூ.160.31 விலை கிடைத்தது ; மொத்த வருவாயாக ரூ.11.70 கோடி ருபாய் கிடைத்தது.
கடந்த, 35 வது ஏலத்தில் கொச்சி ஏலம் ஓணம் விடுமுறை காரணமாக நடத்தப்படவில்லை. இதனால் கடந்த வாரத்தை விட 7.60 லட்சம் கிலோ வரத்து இருந்ததில் 4.89 லட்சம் கிலோ விற்பனை அதிகரித்துள்ளது. மொத்த வருவாய் 8.66 கோடி ரூபாய் உயர்ந்து காணப்பட்டது