Politics
பெற்றோர், ஆசிரியர், நண்பர்களை மதிக்க வேண்டும்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், நேற்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் (பொ) சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:
மாணவியர் தங்கள் வாழ்வில் ஒழுக்கத்தை கடைபிடித்தால், விரைவாக முன்னேறலாம். மதிப்பெண்களுக்காக படிக்காமல் புரிந்து படித்தால் வெற்றி பெறலாம். ஆசிரியரை மதிப்-பது என்பது அவர் முன் எழுந்து நிற்பது மட்டும் இல்லை. அவர் சொல்லும் நல்லவற்றை வாழ்க்-கையில் கடைபிடிப்பதுதான் உண்மையான மரி-யாதை. மாணவ, மாணவியர் எப்போதும் கேள்வி கேட்க தயக்கம் காட்டக்கூடாது. சந்தேகம் தான் அறிவின் தொடக்கம். ஒரு முறை தோற்றால், தோல்வி இல்லை. முயற்சியை நிறுத்தினால் தான் தோல்வி. பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என, எல்லோரையும் மதிக்க வேண்டும். பெரிய பதவியை விட, நல்ல குணம்தான் உங்களை உயர்த்தும். ஆசிரியர் என்பவர் விளக்கு அல்ல. அவர் ஒரு வழிகாட்டி. விளக்கு, வெளிச்சம் மட்டும் காட்டும். வழிகாட்டி, வாழ்க்கையை காட்டுவார்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகளும், மாணவியரின் கலைநிகழ்ச்சி-களும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கல்-லுாரி பேரவை பொறுப்பாசிரியர் வள்ளிசித்ரா செய்திருந்தார். இதில், கல்லுாரி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் உள்பட, 2,000க்கும் மேற்பட்ட
மாணவியர் பங்கேற்றனர்.