ப.வேலுார் அருகே குட்கா பொருட்கள் விற்றவர் கைது
ப.வேலுார்:ப.வேலுார் அருகே, இந்திரா நகர் பகுதியில் உள்ள கடைகளில் அதிகளவில் குட்கா பொருட்கள் விற்பதாக
அருகே, இந்திரா நகர் பகுதியில் உள்ள கடைகளில் அதிகளவில் குட்கா
பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி,
ப.வேலுார் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில் எஸ்.ஐ., சாந்தகுமார்
கொண்ட குழு, இந்திரா நகர் பகுதிகளில் உள்ள டீ, ஹோட்டல் கடைகளில்
சோதனை மேற்கொண்டனர்.
ஆய்வு மேற்கொண்ட போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். மேலும்,
பாலப்பட்டி பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சேகர், 66, என்பவரை
கைது செய்தனர்.
மேலும், 'தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா
பொருட்களை கடைகளில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்' என, ப.வேலுார் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், கடை
உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.