Politics
ஒன்றரை சவரன் தங்கச்சங்கிலியுடன் ஆற்றில் வீசப்பட்ட விநாயகர் சிலை..

கடலூர் அருகே வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைக்கு ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலி அணிவிக்கப்பட்ட நிலையில், மறந்து போய் அப்படியே ஆற்றில் தூக்கி வீசி விட்டதாக கூறியதால் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வண்ணாரப் பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலரான ராமமூர்த்தி என்பவர் தனது மனைவியுடன் சென்று தேவனாம்பட்டினம் அருகே உப்பனாற்றின் பாலத்தில் இருந்து சிலையை வீசியுள்ளார்.
சிலையில் இருந்த நகையை மாலை மறைத்து விட்டதால் மறந்து போய் அப்படியே வீசி விட்டதாகக் கூறியதால் தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்தச் சிலை கிடைக்கவில்லை.