மாநில நீச்சல் போட்டி 300 மாணவர் பங்கேற்பு
சேலம்: 'விப்கியர் அசோசியேஷன்' சார்பில், சேலம் காந்தி மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில், 8 பிரிவுகளில் நேற்று போட்டி நடத்தப்-பட்டது. ஏ.டி.எஸ்.பி., ராஜா ரணவீரன் தொடங்கிவைத்தார்.
பல்-வேறு மாவட்டங்களில் இருந்து, பள்ளி, கல்லுாரியகளில் படிக்கும், 6 முதல், 17 வயது வரையுள்ள மாணவ, மாணவியர், 300க்கும் மேற்பட்டோர், திறமைகளை வெளிப்படுத்தினர். அதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சங்கத்தலைவர் வேலா-யுதம், செயலர் பாக்கியராஜ், பொருளாளர் சங்கர் உள்ளிட்ட நிர்-வாகிகள் பங்கேற்றனர்.