வாழும் கலை ரவிசங்கர் குருஜி தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வருகை
அரூர்;தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தம-லையில், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ராமர், குமாரர் உள்ளிட்ட அற்புத மூலி-கைகளின் சத்துக்கள் கலந்த, நோய் தீர்க்கும், வற்-றாத தீர்த்தங்களில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, நாள்-தோறும், 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம், 1:20 மணிக்கு திருச்சியிலிருந்து 'வாழும் கலை' நிறுவனர் ரவிசங்கர் குருஜி, ஹெலிகாப்டர் மூலம் தீர்த்தமலைக்கு வந்தார். அவரை பக்-தர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். பின், அவர் மலைக்கோவிலுக்கு நடந்து சென்றார். அங்கு, கோவில் திருப்பணிகளை பார்வை-யிட்டார். பின், 3:15 மணிக்கு அங்கிருந்து, பெங்க-ளூரு புறப்பட்டு சென்றார். அவரது வருகையை-யொட்டி பொதுமக்கள் குவிந்தனர்.