தமிழ்நாடு வக்பு வாரியத்தை கண்டித்து தளியில் கடையடைப்பு போராட்டம்
ஓசூர்: தளியிலுள்ள, 24 ஏக்கர் கிராம நத்த நிலத்தில் குடியிருந்த மக்க-ளுக்கு, அரசு சார்பில் பல ஆண்டுக்கு முன் பட்டா வழங்கப்பட்-டது.
அங்கு தற்போது, 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசிக்கின்றன. இதில், 250 இஸ்லாமிய குடும்பங்களும், 80க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களும் உள்ளன. இப்பகு-தியில், வக்பு வாரியத்திற்கு சொந்தமான, 40 சென்ட் நிலம் உள்-ளது. கடந்தாண்டு வக்பு வாரியம் தங்களுக்கு சொந்தமான நிலம் மட்டுமின்றி, கிராம நத்த நிலத்தில் மக்கள் குடியிருக்கும், 24 ஏக்கர் நிலமும், தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்து என, தேன்கனிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆட்சேபனை தெரிவித்தது. மேலும், எந்த நிலத்தையும் பதிவு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது. அதனால், கிராம நத்த நிலத்தில் வசிக்கும் மக்கள், புதிய வீடு கட்ட அனுமதி, மின் இணைப்பு மற்றும் வங்கி கடன் பெற முடியவில்லை. மேலும், வேறொரு நபருக்கு நிலத்தை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று கேட்டால், தமிழ்நாடு வக்பு வாரியம், தடையின்மை சான்று கொடுத்தால் தான், பத்திரப்-பதிவு செய்ய முடியும் எனக்கூறி விடுகின்றனர். சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரியத்திடம், தளி பகுதி மக்கள் புகார் செய்தனர். வக்பு வாரிய சர்வேயரிடம் தெரிவித்ததன் பேரில், அவரும் நேரில் சர்வே செய்து, அந்த நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமில்லை என, மக்களிடம் தெரிவித்து சென்றுள்ளார். எனவே, தேன்கனிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில், தமிழ்நாடு வக்பு வாரியம், மக்களுக்கு சொந்தமான நிலம் தான் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும், பத்திரப்பதிவு செய்ய தடையில்லை என அறிவிக்க வலியுறுத்தி, தளியில் நேற்று கடை-யடைப்பு போராட்டத்திற்கு, மக்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
அதையேற்று தளியிலுள்ள, 160க்கும் மேற்பட்ட கடைகளில், மெடிக்கல் ஸ்டோர், ஒரு சில டீக்கடைகள் தவிர, 150க்கும் மேற்-பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.