Politics
டி.எஸ்.எம்., கல்லுாரியில் ஆசிரியர் தின விழா
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த கனியாமூர் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி தாளாளர் மனோகர்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மகாலட்சுமி வரவேற்று பேசினார்.
தொடர்ந்து, ஆசிரியர் தின விழா குறித்த பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், ஆசிரியர்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் தேவி, ராமு, பிரபாகரன், சிவராமன், அர்ச்சனா, சத்தியமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். செல்வம் நன்றி கூறினார்.