மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி அவசியம்: அமைச்சர்
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் நேற்று துவங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆத்துார், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதிகளில் ஆய்வு செய்தோம். அந்த பகுதிகள் இன்னும் வளர்ச்சி அடையாமல் பின்தங்கி உள்ளன. இத்தனை ஆண்டுகளாக ஏன், அப்படி விட்டார்கள் என தெரியவில்லை. மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி அவசியம். குறிப்பிட்ட தொகுதி மட்டும் வளர்ச்சி பெறுவது வளர்ச்சி இல்லை.திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வளர்ச்சி பெற வேண்டும். அது மிகவும் எளிது இல்லை. இதற்கு அடிப்படையாக சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை, சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.