அரசு பஸ் - லாரி் உரசல்
மேட்டூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று மதியம், 1:00 மணிக்கு கண்ணாமூச்சிக்கு செல்ல, அரசு டவுன் பஸ், பயணியருடன் வெளியே வந்து திரும்பியது. அப்போது பின்புறமாக வந்த, சேலம், பெரியபுத்துாரில் விநாயகர் சிலை ஏற்றி வந்த லாரி உரசி, பஸ் பக்கவாட்டு கண்ணாடி சேதமானது. இதனால் பஸ் - லாரி டிரைவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் உருவானது.
இறுதியாக லாரி டிரைவர், சேதமான கண்ணாடிக்கு பதிலாக புது கண்ணாடி பொருத்த பணம் கொடுத்தார். தொடர்ந்து புது கண்ணாடி பொருத்த, டவுன் பஸ் பணிமனைக்கு சென்-றதால் பிரச்னை முடிந்தது.