வாழைத்தார் விலை உயர்வு இல்லை
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நடந்த ஏலத்தில், வாழைத்தார் விலை உயர்வு ஏதும் இல்லாததால், விவசாயிகள் விரக்தி அடைந்தனர்.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏல மண்டி உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்திற்கு, மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், பவானி சாகர், சத்தியமங்கலம், கோபி ஆகிய பகுதிகளில் இருந்து, 4,000 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில், 20 வியாபாரிகள் பங்கேற்றனர்.
மண்டியில் நடந்த ஏலத்தில், ஒரு கிலோ நேந்திரன், குறைந்த பட்சம், 15க்கும், அதிகபட்சம், 50 ரூபாய்க்கும், ஒரு கிலோ கதளி குறைந்த பட்சம், 20க்கும், அதிகபட்சம், 60 ரூபாய்க்கும் ஏலம் போனது. வாழைத்தார்கள் ஏலம் போனதில், பூவன் அதிகபட்சம், 700 ரூபாய்க்கும், ரஸ்தாலி அதிகபட்சம், 750க்கும், தேன் வாழை, 850க்கும், செவ்வாழை, 1000க்கும், ரோபஸ்டா அதிகபட்சம், 550க்கும், பச்சை நாடன் அதிகபட்சம், 550 ரூபாய்க்கும் ஏலம் போனது.
இந்த வாரம் நடந்த ஏலத்தில், விலை உயர்வு ஏதும் இல்லாமல், கடந்த வார விலை அளவுக்கே ஏலம் போனதால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.