Sport
சாம்பியன்ஸ் லீக்: அபார வெற்றியுடன் கம்பேக் அளித்த சிவப்பு சாத்தான்கள்!

சாம்பியன்ஸ் லீக்கில் அபார வெற்றியுடன் தொடங்கிய மான்செஸ்டர் யுனைடெட் அணி குறித்து...
மான்செஸ்டர் யுனைடெட் அணி - படம்: எக்ஸ் / மான்செஸ்டர் யுனைடெட்
சாம்பியன்ஸ் லீக்கில் இரண்டு சீசன்களுக்குப் பிறகு பங்கேற்ற சிவப்பு சாத்தான்கள் (ரெட் டெவில்ஸ்) என்றழைக்கப்படும் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றியுடன் தொடங்கியது.
இங்கிலாந்தின் பிரபலமான கிளப் மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக் 2026/27 சீசனின் முதல் போட்டியில் ஷபா எஃப்கே அணியுடன் தனது சொந்த மண்ணில் மோதியது.
இந்தப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் 4-0 என அபார வெற்றியைப் பெற்றது. இதில் மேத்திவ்ஸ் குன்யா 27ஆவது நிமிஷத்திலும் ப்ரூனோ பெர்னாண்டஸ் 42ஆவது நிமிஷத்திலும் பெஞ்சமின் செஸ்கோ 45ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.
முதல் பாதியில் 3-0 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் கார்னர் கிக்கில் கிடைத்த பந்தை யுனைடெட் அணியின் டிஃபெண்டர் லிஸாண்டரோ மார்டினெஸ் 68ஆவது நிமிஷத்தில் கோலாக மாற்றினார்.
இந்தப் போட்டியில் 55 சதவிகித நேரம் பந்தை மான்செஸ்டர் யுனைடெட் அணி தன்வசம் வைத்திருந்தது. மொத்தமாக அடித்த 20 ஷாட்டுகளில் 9 முறை இலக்கை நோக்கி அடிக்கப்பட்டது. ஷபா அணி 10 ஷாட்டுகளில் ஒரு முறை மட்டுமே இலக்கை நோக்கி அடித்தது.
யுனைடெட் அணி 633 பாஸ்களில் 91 சதவிகித துல்லியத்தை காட்டினார்கள். இரு அணிகளுக்கும் தலா 1 யெல்லோ கார்டு அளிக்கப்பட்டது.
Manchester United 4-0 Sabah: Winning return to Champions League as Benjamin Sesko scores again for Michael Carrick's side
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.