Politics
விஷ்வ ஹிந்து பரிஷத் ஸ்தாபன தின விழா
ஆண்டிபட்டி, செப். 6- ஆண்டிபட்டியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்தாபன தின விழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி
ஆண்டிபட்டியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்தாபன தின விழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. வர்த்தக பிரதமர் சேட்டுபரமேஸ்வரன் தலைமை வகித்தார். அ.தி.மு.க., ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்முருகன் முன்னிலை வகித்தார். சென்னை உயர்நீதிமன்றம் பஜ்ரங்கள் மாநில அமைப்பாளர் பிரிதிவிராஜன், பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், டாக்டர் தேவி முன்னிலை வகித்தனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராதை, கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்த 250க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஒருங்கிணைப்புகளை விஷ்வ ஹிந்து பரிஷத் மதுரை விபாக் செயலாளர் கண்ணாயிரம் செய்திருந்தார். மாவட்ட சேவா பிரமுகர் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.