Politics
அமைச்சர் வன்னி அரசுவின் சொந்த ஊருக்கு முதன்முறையாக அரசு பேருந்து சேவை.!

சுதந்திர இந்தியாவில், அமைச்சர் வன்னி அரசுவின் சொந்த ஊரான, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அயன்ரெட்டியப்பட்டி கிராமத்திற்கு, தவெக அரசில், பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, தமது சொந்த ஊருக்கு பேருந்து வசதியில்லை என்று கூறியபோது, அவருக்கு உறுதியளித்தவாறு, பேருந்து வசதியை போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏற்படுத்தியுள்ளார். இந்த வகையில், அயன்ரெட்டியபட்டி கிராமத்தில் இருந்து விருதுநகருக்கு முதன்முறையாக அரசு பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் வன்னி அரசு, பின்னர், ஊர் பொதுமக்களுடன் இணைந்து பேருந்தில் பயணம் செய்தார்.