Economy, business and finance
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
திண்டுக்கல், செப்.12 ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை
ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மாதத்தின் 2வது, 4வது சனிக்கிழமைகள் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை தவிர்த்து ஐந்து நாட்கள் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் சாலை ரோட்டில் உள்ள கனரா வங்கி முன் நடந்த போராட்டத்திற்கு கனரா வங்கி அலுவலர்கள் சங்கங்களின் தேசிய துணைப் பொதுச்செயலாளர் காமாட்சிராஜா தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் அனந்தராமன் முன்னிலை வகித்தார். பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மண்டலச் செயலாளர் கிங்ஸ்டன், யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் சங்கத்தின் மண்டலச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மாவட்டத்தில் உள்ள 163 பொதுத்துறை வங்கிகளில் 821 பேர் பணிபுரிகின்றனர். வேலை நிறுத்தம் காரணமாக ரூ.400 கோடி பணப்பரிவர்த்தனை பணிகள் முடங்கியது என அலுவலர்கள் தெரிவித்தனர்.