Crime, law and justice
ஜி.எஸ்.டி., அலுவலக பெண் ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக ஆய்வாளர் கைது
திருமங்கலம்:ஜி.எஸ்.டி., அலுவலக பெண் ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சக ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.
முகப்பேர், 2வது பிரதான சாலையில் ஜி.எஸ்.டி., அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, 32 வயது பெண் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில், தான் பணிபுரியும் அலுவலகத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சவுரவ், 28 என்பவர் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
அவர் தொடர்ந்து தன்னிடம் இரட்டை அர்த்தம் கொண்ட வார்ததைகள் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.
மேலும் தன்னுடைய அனுமதியின்றி புகைப்படத்தை சமூக வலைதளப்பக்கத்தில் இருந்து திருடி, மார்ப்பிங் செய்து பரப்பி வருகிறார்.
காதலுக்கு வயது தடையில்லை என்ற வாசகங்களை குறிப்பிட்டு தொல்லை கொடுத்து வருகிறார்.
அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.
வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த சவுரவ் என்பவரை நேற்று கைது செய்தனர்.