என் பட்டு, என் பெருமை விவசாயிகளுக்கு பயிற்சி
பாப்பிரெட்டிப்பட்:தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை மற்றும் மத்திய பட்டு வாரியம் இணைந்து, தர்மபுரி மாவட்டம்
பட்டு வளர்ச்சி துறை மற்றும் மத்திய பட்டு வாரியம் இணைந்து, தர்மபுரி
மாவட்டம் அரூர் தொழில்நுட்ப சேவை மையத்திற்கு உட்பட்ட ஒடசல்பட்டியில்
பட்டு வளர்ப்பு துறையின் சார்பில் விவசாயிகளுக்கு, 'என் பட்டு என்
பெருமை' தொழில்நுட்ப பிரசார கூட்டத்தை நடத்தியது.
இதில், தர்மபுரி உதவி இயக்குனர் கஸ்துாரி தலைமை வகித்து பூச்சியில் மேலாண்மை மற்றும் துறைசார் மானியம் குறித்து பேசினார்.
பட்டுவாரிய விஞ்ஞானி டாக்டர் மகேஷ் தொழில்நுட்ப பிரசாரத்தை தொடங்கி
வைத்து மல்பெரி நாற்று நடவு, இலை மகசூல், புழு வளர்ப்பு மற்றும் நீர், உர
மேலாண்மை, வேர் அழுகல் பற்றிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் ஒடசல்பட்டி, கடத்துார் கம்பைநல்லுார், மொரப்பூர் ஆகிய பகுதிகளை
சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தொழில் நுட்ப
ஆலோசனைகளை பெற்றனர்.
கூட்டத்தில் உதவி ஆய்வாளர் ஜோதி, இளநிலை ஆய்வாளர்கள் அனிதா, நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.