Arts, culture, entertainment and media
மோகன்லால் திரைப்படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?
மீண்டும் மலையாளத் திரைப்படத்தில் சாய் அபயங்கர்...

நடிகர் மோகன்லாலின் புதிய திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் மோகன்லால் த்ரிஷ்யம் - 3 திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் அதிமனோகரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். துடரும் கூட்டணியின் திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தொடர்ந்து, இயக்குநர்கள் விஷ்ணு மோகன், பிரியதர்ஷன், திலீஷ் போதன், சத்யன் அந்திகாட், ஜூட் ஆண்டனி ஜோசப், ஜீத்து ஜோசப் ஆகியோரின் படங்களில் மோகன்லால் நடிக்க உள்ளார்.
இதில், இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் நடிகர் மோகன்லாலின் 370-வது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு போஸ்டர் வெளியானது.
இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்தியளவில் வளர்ந்துவரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் மலையாளத்தில் வெளியான பல்டி படம் மூலமே திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது, மீண்டும் மலையாளப் படத்திற்கு இசையமைக்க உள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
Reports indicate that Sai Abhyankar will compose the music for actor Mohanlal's new film.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.