Politics
சி.யு.ஜி., சிம் தாரகை கோரிக்கை
''எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும், சி.யு.ஜி., 'சிம் கார்டு'கள் வழங்க வேண்டும்,'' என, காங்கிரஸ் - தாரகை கத்பட் தெரிவித்துள்ளார்.
அலுவலக பயன்பாட்டுக்கு வழங்கப்படுவது போன்று, எம்.எல்.ஏ.,க்களுக்கும், 'சி.யு.ஜி., சிம் கார்டு' வழங்க வேண்டும்.
தொகுதிக்கான எம்.எல்.ஏ., ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறினாலும், அந்த மொபைல் போன் எண் மாறாமல் இருக்கும். இதுகுறித்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப்பொருள் கடத்தலை தடுக்க, கேரளா உட்பட மாநில எல்லைகளில் சோதனைகள் மேற்கொள்ள, கூடுதல் போலீசாரை பணி யமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.