காவிரி ஆற்றில் மூழ்கிய வாலிபர் சடலமாக மீட்பு
பவானி,:அம்மாபேட்டை அருகே மாரப்பனுாரை சேர்ந்தவர் கிஷோர், 24; சென்ட்ரிங் தொழிலாளி. திருமணமாகி விவாகரத்து பெற்ற
அருகே மாரப்பனுாரை சேர்ந்தவர் கிஷோர், 24; சென்ட்ரிங் தொழிலாளி.
திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், பெற்றோருடன் வசித்தார்.
அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர் பிரிவு, வாட்டர் டேங்க் காவேரி
ஆற்றில் குளிப்பதற்காக, நண்பர்களுடன் நேற்று மதியம் வந்தார்.
நீச்சல் தெரியாத நிலையில் ஆற்றில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார்.
அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், கிஷோரை தேடும் பணியில்
ஈடுபட்டனர். மாலை, 6:00 மணியளவில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அம்மாபேட்டை
போலீசார் விசாரிக்கின்றனர்.