Politics
இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த மசோதா நியூசிலாந்து பார்லிமென்டில் நிறைவேற்றம்
-நமது நிருபர்- நியூசிலாந்து பார்லிமென்ட் இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த மசோதாவை 93-29

நியூசிலாந்து பார்லிமென்ட் இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்றியது; எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் ஆதரவுடன், இந்தச் சட்டம் 93-29 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. நியூசிலாந்தின் ஒன்பதாவது பெரிய பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி சந்தையாக இந்தியா திகழ்கிறது.
சட்டம் அமலுக்கு வரும் நாளிலிருந்து, அனைத்துப் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை வரி விலக்கு பெறும். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலம், நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் 100 சதவீதம் முழுமையான வரியில்லா அனுமதி வழங்கப்படுகிறது.
நியூசிலாந்தின் பொருட்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவற்றுக்கு ஒப்பந்தம் அமலுக்கு வரும் நாளிலிருந்தே வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 95 சதவீதப் பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்படும் அல்லது முற்றிலுமாக நீக்கப்படும். அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் நியூசிலாந்து டாலர் (ரூ. 1 லட்சம் கோடி) முதலீடு செய்யவும் வெலிங்டன் ஒப்புக்கொண்டுள்ளது.