Lifestyle and human interest
"விஜய்யை விட நான் நன்றாக நடனமாடியுள்ளேன்" - 'ஏஐ டான்ஸ்' வீடியோ குறித்து கேரள முதலமைச்சர் பேச்சு!

ஏஐ டான்ஸ் வீடியோ குறித்து கேரள முதல்வர் சதீசன், "விஜய்யை விட நான் நன்றாக நடனமாடியுள்ளேன்" என்றார்.
ஏஐ டான்ஸ் வீடியோ அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், விஜய்யை விட தான் நன்றாக நடனமாடி உள்ளதாக கேரள முதலமைச்சர் சதீசன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், அந்த மாநில மின்வாரிய ஊழியர்களுடன் ‘ஜெயிலர்-2’ திரைப்படத்தின் ‘அல்ல போலே’ பாடலுக்கு கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் நடனமாடும் வகையில் சிலர் ஏஐ வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டனர். தத்ரூபமாக உருவாக்கப்பட்ட இந்த வீடியோ இணைய உலகை கலக்கி வருகிறது.
ഇത്തരം ദൃശ്യങ്ങൾ കിട്ടിയാൽ ആരാണ് പ്രചരിപ്പിക്കാത്തത് എല്ലാവരും പ്രചരിപ്പിക്കും 😂🤏🏽 pic.twitter.com/S4dmoN1w49
— Jikku Jignesh ☭ (@Jikku_Jignesh) September 11, 2026
இந்நிலையில், எர்ணாகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சதீசன் இந்த வீடியோ குறித்து பேசினார். அதில், "நான் நடனமாடுவது போல வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அதனை பார்த்து வியந்துவிட்டேன். நான் மோகன்லால், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை விட அந்த வீடியோவில் நன்றாக நடனமாடி உள்ளேன்." என்று குறிப்பிட்டார்.
‘இசை, சினிமா, சட்டம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்தபோது அவர் இதனை கூறினார்.
