Politics
அடிப்படை வசதி கோரிக்கையுடன் கேரள முதல்வரை சந்தித்த இளைஞர்

மூணாறு:இடமலைகுடி ஊராட்சியில் மலைவாழ் மக்களின் அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கையுடன், அதே பகுதியைச் சேர்ந்த சந்தனம் தனிமையில் சென்று கேரள முதல்வர் சதீசனை நேரில் சந்தித்தார்.
மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர். அங்கு ரோடு, மருத்துவம், குடிநீர், வீடு உள்பட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இந்நிலையில் அதே ஊராட்சியில் இடலிபாறைகுடியில் வசிக்கும் பட்டதாரியும், சமூக ஆர்வலருமான சந்தனம், தனது சமூகத்தைச் சேர்ந்த மக்களின் அடிப்படை வசதிகளுக்காக நீண்ட தூரம் சொந்த செலவில் பயணித்து திருவனந்தபுரம் சென்றவர், தலைமை செயலகத்தில் தனியாக முதல்வர் சதீசனை சந்தித்தார். அவரிடம் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கையை முன்வைத்தார். அவரை அன்புடன் வரவேற்ற முதல்வர், அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதாக உறுதி அளித்ததாக சந்தனம் தெரிவித்தார்.