அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அவதி நர்சரி உரிமையாளர்கள் சாலை மறியல்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அகலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில், ஏராளமான நர்சரி பண்ணைகள் உள்ளன. இங்குள்ள செடிகளுக்கு தினமும் பலமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
ஆனால், அகலக்கோட்டை மற்றும் அதன் சுற்-றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்பட்டதால், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், நர்சரி தொழில் முடங்கும் நிலை உருவா-னது.இந்நிலையில், ஜவளகிரி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு எனக்கூறி, நேற்று காலை முதல் மாலை வரை, மின்-தடை அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாததால் கடும் மன உளைச்சலில் இருந்த நர்சரி உரி-மையாளர்கள், மின்தடை அறிவித்ததால் கடும் ஆத்திரமடைந்-தனர். ஜவளகிரி - தேன்கனிக்கோட்டை சாலையில், அகலக்-கோட்டை முன்னாள் பஞ்., தலைவர் மூர்த்தி தலைமையில், நேற்று காலை, 10:30 முதல், 11:00 மணி வரை மறியல் போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் ஜவளகிரி துணை மின்நிலைய உதவி பொறியாளர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கெம்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து சீரான மின்வினியோகம் செய்யப்-படாததால் மின்தடை ஏற்பட்டதாக அவர் விளக்கமளித்து, மின்-தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும், உதவி பொறியாளர் சரவணன் உறுதியளித்தார். அதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது. மறியலால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.