Religion
அசாமில் இருந்து மதுரைக்கு வந்த 'துர்கா'... மீனாட்சி அம்மன் கோயிலின் புதிய செல்லப்பிள்ளை

ஏற்கனவே பார்வதி என்ற பெண் யானை கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், துர்கா யானை வருகையால் கோயில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு புதிய வரவாக 5 வயதுடைய குட்டி பெண் யானை வந்துள்ளது. துர்கா என பெயரிடப்பட்டுள்ள இந்த யானை கோயிலுக்கு வந்துள்ளதால், கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பார்வதி என்ற பெண் யானை கோயிலில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அசாம் மாநிலத்தில் இருந்து 5 வயது துர்கா யானை மதுரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. சென்னை சேவா டிரஸ்ட் மூலம் இந்த யானை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கோயிலுக்கு அழைத்து வரப்பட்டுள்ள துர்கா, யானைகள் பராமரிக்கப்படும் இடத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட உள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் யானைகள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது. ஏற்கனவே பார்வதி யானை கோயில் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
5 வயது இளம் பெண் யானையான துர்கா கோயிலுக்கு வந்திருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. புதிய சூழலுக்கு துர்காவை படிப்படியாகப் பழக்கப்படுத்தி, அதன் உடல்நலம் மற்றும் உணவு உள்ளிட்ட தேவையான பராமரிப்பில் கோயில் நிர்வாகம் கவனம் செலுத்த உள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புதிய வரவாக வந்துள்ள துர்கா யானை, எதிர்காலத்தில் கோயில் விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் துர்கா யானையை காண பக்தர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
