Economy, business and finance
பொம்மைகள் தயாரிப்புக்கு உத்தர பிரதேச அரசு ஊக்கம்; மாநில அமைச்சரவை ஒப்புதல்

லக்னோ: உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் பொம்மைகள் தயாரிப்புக்கு புதிய கொள்கை, எத்தனால் ஆலை அமைப்பது உள்ளிட்ட 23 திட்டங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பொம்மைகள் உற்பத்திக்கு புதிய கொள்கை, வீடு மற்றும் கடைகளுக்கு முத்திரை தீர்வை குறைப்பது, அ யோத்தி மாவட்டம் மில்கிபூரில் தேசிய பாதுகாப்பு படையின் மண்டல மையம் அமைப்பது, அலிகாரில் புதிய பல்கலைக்கழகம் தொடங்குவது, வாகனங்களுக்கான தானியங்கி சோதனை மையங்க ள் அமைப்பதற்கான விதிகளில் திருத்தம் செய்வது உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பொம்மை உற்பத்தியை அதிகரிப்பது, புதிய முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு பொம்மை உற் பத்தி கொள்கை செயல்படுத்தப்பட உள்ளது.
முத்திரை தீர்வையை குறைப்பதால் வீடு மற்றும் கடைகளை வாடகைக்கு விடுவது எளிதாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.