Politics
ஐ.ஏ.எஸ்., இன்டர்நேஷனல் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு சர்வதேச மாநாடு
ஈரோடு, :ஈரோடு இண்டஸ் கலை மற்றும் அறிவியல் இன்டர்நேஷனல் கல்லுாரியில், நேரடி மற்றும் இணையம் வழியாக செயற்கை

இண்டஸ் கலை மற்றும் அறிவியல் இன்டர்நேஷனல் கல்லுாரியில், நேரடி
மற்றும் இணையம் வழியாக செயற்கை நுண்ணறிவு குறித்த சர்வதேச மாநாடு
நடந்தது.
கல்லுாரி இணை செயலாளர் அருண்பாலாஜி விழாவை தொடங்கி வைத்தார்.
இலங்கை கிழக்கு பல்கலை திருகோணமலை வளாகம், கும்பகோணம் அரசு
பொறியியல் கல்லுாரி, ஈரோடு இண்டஸ் கலை அறிவியல் இன்டர்நேஷனல்
கல்லுாரி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி நிறுவனங்கள் இணைந்து நடத்திய
மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் ரவிசங்கர் வரவேற்றார். இலங்கை கிழக்கு பல்கலை மொழியியலில்
முதுநிலை விரிவுரையாளர் ஜெயசுந்தரா, சர்வதேச நிகழ்ச்சிகளின் டீன்
மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லுாரி, ஆங்கில இணைப் பேராசிரியர் சாமுவேல்
ரூபஸ், கேரளா சங்கனாசேரி செயின்ட் பெர்ச் மன்ஸ் கல்லூரி உதவி
பேராசிரியர் நிதின் வர்கீஸ், வேலுார் திருவள்ளுவர் பல்கலை ஆங்கில
உதவி பேராசிரியர் தமிழினி சிறப்புரையாற்றினர்.
சேர்ந்த ஹெட் ஆப் கார்ப்பரேட் கம்யுனிகேசன் மற்றும் பேச்சாளர்
நிப்ராஸ் ரிபாஸ் இணையம் வழியாக செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தகவல்
தொடர்பின் தொடரியல் மற்றும் பொருளியல் குறித்தான தகவல்களை
விளக்கினார்.