மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: செப்.13 மாலை நிலவரம்!

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு குறித்து...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - படம் - தினமணி
காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை வினாடிக்கு 7,598 கன அடியாக அதிகரித்துள்ளது
மேட்டூர் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 522 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலை 4 மணிக்கு வினாடிக்கு 7,598 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு12,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.52 அடியிலிருந்து 88.32 அடியாக உள்ளது. நீர் இருப்பு 50.83 டிஎம்சியாக உள்ளது.
Increase in water inflow to Mettur Dam: Status as of the evening of September 13
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.