அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், புதுச்சேரி ரோட்டரி சங்கம் பெண்கள் பிரிவு சார்பில், இருதய நோய், சர்க்கரை நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலட்டி மருத்துவமனையில் உயர் ரக சிகிச்சை பெறுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் சாய் அரங்கில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் சேர்மன் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதன்மை இயக்க செயல்பாட்டு அதிகாரி வித்யா, கல்லுாரி இயக்குனர் ரத்தினசாமி, கண்காணிப்பாளர் ஜோசப் ராஜ், துணை மருத்துவ கண்காணிப்பாளர்கள் ராஜசேகர், டாக்டர் சுரேஷ் மற்றும் பொது மேலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவமனை இருதய துறை தலைவர் பாஸ்கரன் சினுவாசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் புதுச்சேரி பிரெஞ்சு துாதரக இணை இயக்குனர் ஜீன் பிலிப் ஹக்டர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை துணை பொது மேலாளர் புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் செய்தனர். ரோட்டரி பெண்கள் சங்க தலைவி கிளாடியன் குணசேகர் நன்றி கூறினார்.