Arts, culture, entertainment and media
இருசக்கர வாகனம் -சைக்கிள் மோதல்: இருவா் உயிரிழப்பு
காட்டுப்புத்தூா் அருகே இருசக்கர வாகனமும் சைக்கிளும் செவ்வாய்க்கிழமை இரவு மோதிக் கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே இருசக்கர வாகனமும் சைக்கிளும் செவ்வாய்க்கிழமை இரவு மோதிக் கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
காட்டுப்புத்தூா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (50). விவசாயக் கூலித் தொழிலாளி. செவ்வாய்க்கிழமை இரவு வளையப்பட்டிக்கு பைக்கில் சென்றுவிட்டு, மீண்டும் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
இதேபோல், குளத்துப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான கணேசன் (52) காட்டுப்புத்தூா் சென்றுவிட்டு சைக்கிளில் வந்தாா்.
காட்டுப்புத்தூா்-வளையப்பட்டி மெயின் சாலையில் குளத்துப்பாளையம் அருகே வந்த இரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு காட்டுப்புத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றபோது, இருவரும் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
தகவலறிந்த காட்டுப்புத்தூா் போலீஸாா்இருவரது சடலங்களையும் மீட்டு கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.