Crime, law and justice
நிலுவை வழக்குகளில் தீர்வு காண கரூர் சார்பு நீதிபதி அழைப்பு
கரூர்:கரூர் மாவட்ட நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகளை, நேரடியாகவோ அல்லது இணைய வழியாகவோ பேசி தீர்வு
மாவட்ட நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகளை, நேரடியாகவோ
அல்லது இணைய வழியாகவோ பேசி தீர்வு காண, தேவையான நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என, மாவட்ட சமரச தீர்வு மைய ஒருங்கிணைப்பாளர்
மற்றும் சார்பு நீதிபதியுமான அனுராதா தெரிவித்துள்ளார்.
உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையம், மாவட்ட
முதன்மை நீதிபதி சுமதி வழிகாட்டுதல்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள,
மாவட்ட சமரச தீர்வு மையத்திலும், தாலுகா அளவில் உள்ள துணை சமரச தீர்வு
மையங்களிலும் கடந்த ஆக., முதல் செப்., வரை, 60 நாட்கள்
நீதிமன்றங்களில் உள்ள, சமரசத்திற்கு உள்ள வழக்குகள் சமரச தீர்வு
மையத்துக்கு அனுப்பி வைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முகாம்களில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குடும்ப நல வழக்கு,
பணமோசடி வழக்கு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட
வழக்கு, வணிகம் சம்பந்தப்பட்ட வழக்கு மற்றும் சிவில் வழக்குகளில்
சமரசம் செய்ய, மாவட்டம் முழுவதும், 28 சமரசர்கள் உள்ளனர். தங்களது
வழக்குகளை நேரடியாகவோ, இணைய வழியாகவோ பேசி தீர்வு காண ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வழக்காடிகள் பயன்படுத்தி கொள்ள
வேண்டும்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.