Economy, business and finance
சில்லரை விலை பணவீக்கம் உயர்வு: உணவு பொருள் விலை அதிகரிப்பு காரணம்

புதுடில்லி: உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த ஆகஸ்ட் மாத த்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 4.82 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முத ல் வெளியிடப்பட்டு வரும் புதிய அடிப்படை ஆண்டு அடிப்படையிலான தரவுகளின் கீழ், இதுவே அதிகபட்ச பணவீக்கம் ஆகும்.
தேசிய புள்ளியியல் அலுவலகம், ஆகஸ்ட் மாதத்துக்கான சில்லரை விலை பணவீக்க தரவுகளை வெளியிட்டுள்ளது. இதன் விபரம்:
கடந்த ஜூலை மாதத்தில் 4.45 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம், ஆகஸ்டில் 4.82 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் நடுத்தர இலக்கான 4 சதவீதத்தை தாண்டி பணவீக்கம் பதிவாகியுள்ளது.
ஜூலையில் 5.52 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம், ஆகஸ்டில் 5.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. வெங்காயம் 48.27 சதவீதம், பூண்டு 43.60 சதவீதம் மற்றும் இஞ்சி 73.82 சதவீதம் என்ற அளவில் கடுமையான வி லைவாசி ஏற்றத்தை கண்டுள்ளன.