Politics
‘சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ வேல்முருகன் சி.சி., அசத்தல்
சென்னை: ‘சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ கிரிக்கெட் தொடரில், வேல்முருகன் சி.சி., அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நட்பு ரீதியான ‘சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, கிண்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் நேற்று நிறைவடைந்தது. இதில், சென்னையைச் சேர்ந்த வி.எம்.சி.ஏ., எனும் வேல்முருகன் சி.சி., மற்றும் எம்.ஆர்.சி.சி., அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த வேல்முருகன் சி.சி., அணி, 27 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பிரணவ் ஸ்ரீகுமார், 13, என்பவர் 71 பந்துகளில் மூன்று சிக்சர், 12 பவுண்டரிகளை அடித்து, 101 ரன்கள் விளாசினார். மற்றொரு வீரர் அனிருத், 16, என்பவர், 60 பந்துகளில், 73 ரன்கள் அடித்தார்.
அடுத்து களமிறங்கிய எம்.ஆர்.சி.சி., அணி, 27 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, வேல்முருகன் சி.சி., அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடி சதம் விளாசிய பிரணவ் ஸ்ரீகுமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.