மெத்தபெட்டமைன் போதை பொருள் வைத்திருந்த திருநங்கைக்கு காப்பு
ஈரோடு:ஈரோடு, சூரியம்பாளையம் கோணவாய்க்கால் பகுதி ஆறுமுகம் மகன் சித்திக், 38. கடந்த, 2016ல் திருநங்கையாக மாறினார்.
சூரியம்பாளையம் கோணவாய்க்கால் பகுதி ஆறுமுகம் மகன் சித்திக், 38.
கடந்த, 2016ல் திருநங்கையாக மாறினார். இவர் பெயர் அஞ்சனா ஸ்ரீ.
தற்போது பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட் முனியப்பன் கோவில் அருகே
வசிக்கிறார். ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் நின்ற இவரை சூரம்பட்டி
போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம், மெத்தபெட்டமைன் என்ற
போதை பொருள், 4 கிராம் 25 மில்லி இருந்தது தெரிந்தது. இதன் மதிப்பு, 30
ஆயிரம் ரூபாய். இவரிடம் நடத்திய விசாரணையில், சொந்த
உபயோகத்துக்காக பெங்களூருவில் இருந்து வாங்கி வருவது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.