பல இடங்களில் பாதாள சாக்கடை சிமென்ட் மூடி சேதத்தால் அவதி
கரூர்:கரூர் மாநகராட்சி பகுதிகளில், பல இடங்களில் பாதாள சாக்கடை சிமென்ட் மூடிகள் உடைந்துள்ளதால், வாகன
மாநகராட்சி பகுதிகளில், பல இடங்களில் பாதாள சாக்கடை சிமென்ட்
மூடிகள் உடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
மாநகராட்சி, பழைய கரூர் மற்றும் இனாம் கரூர் நகராட்சி பகுதிகளில்,
பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பாதாள சாக்கடை குழாயில்
அடைப்பு ஏற்படும் போது, அதை சரி செய்ய வசதியாக, வட்ட வடிவில் மேல்
பகுதிகளில், துவாரம் விடப்பட்டு, சிமென்ட் மூடிகள் போடப்பட்டுள்ளன.
பல முக்கிய சாலைகளில், பாதாள சாக்கடை மேல் பகுதியில் போடப்பட்டுள்ள,
சிமென்ட் மூடிகள் சேதமடைந்துள்ளன.
கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு சேதமடைந்துள்ளது. இதனால்,
வாகனங்களின் டயர்கள் சேதமடைகிறது. இரவு நேரத்தில், டூவீலர்களில்
செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர். பாதாள சாக்கடை சிமென்ட் மூடி,
சேதமடைந்துள்ளது என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார்
தெரிவித்தாலும், அதை உடனடியாக சரி செய்யாமல், மாநகராட்சி
செய்கிறது.