Arts, culture, entertainment and media
உரிகம் சிவசுப்பிரமணியர் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்
தங்கவயல்: உரிகத்தில் உள்ள சிவசுப்பிரமணியர் கோவிலில், நாளை மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தங்கவயல் உரிகம் ரயில் நிலையம் அருகே எலக்ட்ரிக்கல் காலனியில், சிவசுப்பிரமணியர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்தன. புதிதாக சிவன், பார்வதி, நவக்கிரஹங்கள், ரங்கநாதர் விக்ரஹங்கள் நிறுவி உள்ளனர்.
புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, கோவிலில் நாளை அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இன்று காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, விசேஷ சாந்தி, திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, தத்வார்ச்சனை, நாடி சந்தானம், வேத பாராயணம், சிறப்பு ஹோமம், பூர்ணாஹுதி , தீபாராதனை, பிரசாத விநியோகம்.
நாளை அதிகாலை 5:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கிறது. காலை 8:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம்; தொடர்ந்து பிரசாத வினியோகம், அன்னதானம் வழங்கப்படுகிறது.