சரக்கு வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு

மகாராஜகடை: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே மருதேப்பள்ளியை சேர்ந்தவர் சின்னபையன், 56, விவசாயி; நேற்று முன்தினம் காலை, 6:30 மணிக்கு சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்-சாலையில், டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார்.
சுபேதார் மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, அவ்வ-ழியாக வந்த தோஸ்த் சரக்கு வாகனம், மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சின்னபையன், கிருஷ்ணகிரி அரசு மருத்-துவக்கல்லுாரி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.