Economy, business and finance
பேக்கரி கடையில் பணம் திருட்டு
கரூர்:வேலாயுதம்பாளையத்தில், பேக்கரி கடையில் பணத்தை திருடி சென்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மாவட்டம், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் விகடகவி, 30; இவர், கரூர்
மாவட்டம், புகழூர் வள்ளுவர் நகரில் தங்கி, வேலாயுதம்பாளையம்
ரவுண்டானா அருகே, பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று
முன்தினம் வழக்கம் போல பேக்கரி கடையை திறக்க, விகடகவி சென்றார்.
அப்போது, பேக்கரி கடை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும்,
கடையில் வைக்கப்பட்டிருந்த, 3,000 ரூபாயை காணவில்லை. மர்ம நபர்கள்
திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, விகடகவி போலீசில் புகார்
செய்தார்.
வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.