காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆர்ப்பாட்டம்
கோவை: மேட்டுப்பாளையம் ரோடு கோவை மண்டல நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெடுஞ்சாலைத்துறையில் மறுசீரமைப்பின் போது பொறியாளர் பணியிடம் அதிகரிக்கப்படுகிறது. பிற பணியிடங்கள் குறைக்கப்படுகின்றன. இன்றைய சூழலுக்கேற்ப பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும்.
1986 வரை 42,533 கி.மீ. சாலை பராமரிக்கப்பட்டது. 1,800 சாலை ஆய்வாளர் பணியிடம் அனுமதிக்கப்பட்டது. இப்போது 69,000 கி.மீ.க்கு அதிகமாக சாலை பராமரிக்கப்படுகிறது. இதற்கேற்ப சாலை ஆய்வாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இளநிலை பொறியாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் காலி பணியிடங்களை அந்தந்த ஆண்டே நிரப்ப வேண்டும். காலாண்டுக்கு ஒருமுறை மண்டல அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும்.
இவவாறு, அவர்கள் கூறினர்.
மாநில பொது செயலாளர் குருசாமி, பொருளாளர் சாலமன், செயலாளர்கள் சக்தி நாராயணன், ஜெகதீஷ், தவசிலிங்கம், மண்டல செயலாளர் சிவன்ராஜு, கவுரவ பொது செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.