தமிழகத்தில் இன்று 9 மாவட்டம், நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (செப் 15) பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தெற்கு உள் கர்நாடகா முதல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (செப் 15) பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை (செப் 16) கனமழை பெய்யக்கூடும்; தமிழகத்தின் மற்ற பகுதிகளில், சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.