மருத்துவக் கல்லுாரி சமையலறையில் காலவதியான பொருட்கள் பறிமுதல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி சமையலறையில் காலவதியான பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ஆண்கள், பெண்கள் விடுதிகள் மற்றும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை சமையலறைகளில் ஆய்வு நடத்தினர்.
இதில் ராமநாதபுரம் அரசு மருத்தவக் கல்லுாரி ஆண்கள் விடுதியில் காலாவதியான மைதா 13 கிலோ, நிலக்கடலை 2 கிலோ பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சமையலறை நிர்வாகத்திடம் காலாவதியான பொருட்களை பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
மேலும் சமையலறை சுவர்கள், தரைகளில் உள்ள பூஞ்சைகளை அகற்றி வெள்ளை அடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். –––