Politics
மணலுார் பேட்டையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க ஈ.ஓ., வலியுறுத்தல்
திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என செயல் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மணலுார்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
மணலுார்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும், திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் வீடுகள், வணி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் சேரும் குப்பைகளை ஈரக்கழிவு, உலர் கழிவு, சானிட்டரி கழிவு, சிறப்பு கவனக் கழிவு என நான்கு வகையாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
இதன் மூலம் பேரூராட்சியின் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
