அரசு பஸ் மோதி ஓட்டல் ஓனர் பலி
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அருகே நாரல்சந்தம்பட்டி கிரா-மத்தை சேர்ந்தவர் முருகேசன், 46. கண்ணண்டஹள்ளியில் ஓட்டல் நடத்தி வருகிறார்;
கண்ணண்டஹள்ளியிலிருந்து மத்-துாரை நோக்கி தன் டி.வி.எஸ்., மொபட்டில் நேற்று காலை சென்றார்.மத்துார் டோல்கேட் அருகே உள்ள வளைவில் சென்றபோது, திரு-வண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற, கர்நாடக அரசு பஸ், மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகேசனை மீட்ட பொதுமக்கள், மத்துார் அரசு மருத்துவ-னைக்கு அனுப்பினர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு, தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.