Politics
வரும்... ஆனா வராது! விஜய்யின் புதிய தலைமைச் செயலக சர்ச்சை!

சென்னை கடற்கரை கிராமமான பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கான அரசாணையை அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்திருக்கிறது முதல்வர் விஜய்யின் த.வெ.க. கூட்டணி அரசு. விஜய்யின் ஜோதிட கனவு பலிக் குமா? சிக்கல்கள் உருவாகுமா? என்கிற விவாதங்கள்தான் தற்போது அலையடிக்கிறது.
ஜோதிட நம்பிக்கையில் விஜய் !
முதல்வர் விஜய், கடக ராசிக்காரர். இவரின் உயிரினம் நண்டு. அந்த வகையில், கடக ராசிக்காரரான விஜய், கடலோரச் சூழலில் அமர்ந்து ஆட்சி அதிகாரம் செய்தால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவரை எந்த சக்தியாலும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது என்று ஆஸ்தான ஜோதிடர் சொன்னதன் அடிப்படையில் தற்போதுள்ள தலைமைச் செயலக வளாகத்தில் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு தனது ஜாகையை மாற்றும் வகையில் அங்கு மாற்றங்கள் நடந்துவருகின்றன. ஆனால், இது தற்காலிகமானதுதான் ; ஆட்சி அதிகாரத்தில் நீடித்து நிலைத்து நிற்க வேண்டுமானால் கடலோரப் பகுதியில் விஜய்யின் ராசிக்கேற்ப தலைமைச் செயலகத்தின் திசைகள் முடிவாகி அதற்கேற்ப புதிய தலைமைச் செயலகத்தின் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு அதில் அமர்ந்து ஆட்சி செய்தால் தேசிய அளவில் அரசியலில் உச்சத்தை அடையலாம் என ஜோதிடர் நம்பிக்கை கொடுத்தார். ஜோதிடத்தின் மீது தீராத காதல் கொண்ட முதல்வர் விஜய், ஆஸ்தான ஜோதிடரின் யோசனையை ஏற்றுக்கொள்ள, இதோ புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கான அரசாணை ரிலீஸ் ஆகியிருக்கிறது.
புதிய தலைமைச்செயலகத்திற்கான இடம் தேர்வு!
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான தகுதியுள்ள பொருத்தமான இடத்தை தேர்வு செய்து தருமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட் டிருந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள், வீட்டுவசதித்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் என மூன்று தரப்பினரும் இதற்காக ஆலோசித்தார்கள். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகளை இணைக்கும் பகுதிகள், கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகம், கிண்டியிலுள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிறுவனம் (கவர்னர் மாளிகை எதிரே), நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டது. ஆனால், விஜய்க்கு இருக்கும் ஜோதிட நம்பிக்கை அதி காரிகளிடம் விவ ரிக்கப்பட்டது. அதன்பிறகே, இறுதி யில் கிண்டியிலுள்ள நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிறுவனம், நந்தம் பாக்கம், பட்டினப் பாக்கம் ஆகிய 3 இடங்கள் அடை யாளம் காணப்பட்டு பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்தார் விஜய். புதிய தலைமைச்
செயலகம் அமையும் இடத்துக்கு அருகே விஜய்க்கு ஒரு குடியிருப்பு இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
1,200 கோடி! 25 ஏக்கர் பரப்பளவு!
மொத்தம், 20 லட்சம் சதுர அடியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 15 அடுக்குகள் கொண்டதாக புதிய தலைமைச் செயலகம் வடிவமைக்கப்படவிருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த, கட்டடக்கலைக்கான ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்ய ஒரு கமிட்டி, கட்டட வடிமைப்பு மற்றும் வரைபடம் ஆகியவற்றை தேர்வு செய்யும் தொடக்க நிலை கமிட்டி, கட்டட வடிவமைப்பு மற்றும் வரைபடத்தை இறுதி செய்யும் இறுதிக்கட்ட கமிட்டி என மூன்று கமிட்டிகள் அமைக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சி, வீட்டுவசதி வாரியம் ஆகியவற்றிற்கு சொந்தமான 25.55 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை புதிய தலைமைச் செயலகத்திற்காக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பொதுத்துறை செயலாளர் சுந்தரவள்ளி தெரிவித்திருக்கிறார்.
கடற்கரையோர கட்டடங்களுக்கானவிதிகள் என்ன?
கடற்கரையை ஒட்டியுள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதாக இருந்தாலும் கூட, கடலோர ஒழுங்கு முறை ஆணைய சுற்றுச்சூழல் விதிகளின்படி அனுமதிகள் பெற வேண்டும். புதிய தலைமைச் செயலகம் அமையும் பட்டினப்பாக்கம் பகுதி என்பது, CRZ எனும் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் CRZ-II மற்றும் CRZ-III என்கிற வகைப் பாட்டின் எல்லைக்குள் (கடலிலிருந்து 500 மீட்டர்) வருகிறது. அதனால், தமிழ்நாடு ஸ்டேட் கோஸ்டல் ஷோன் மேனேஜ்மெண்ட் அத்தாரிட்டியிடம் (TNSCZMA) தமிழக அரசு முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று பரிந்துரை பண்ணினால்தான், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத் திடம் விண்ணப்பிக்கவே முடியும். டெல்லியிலுள்ள அந்த சுற்றுச்சுழல் அமைச்சகம், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் சட்ட விதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து CRZ க்ளியரன்ஸ் கொடுக் கும். அது மட்டுமல்லாமல், 20,000 சதுர மீட்டருக்கு மேலே உருவாக்கப்படும் எந்த ஒரு கட்டிட வகைப்பாடாக இருந்தாலும் EIA (என்விரோன் மெண்ட் இம்பேக்ட் அசெஸ்மெண்ட்) க்ளியரன்ஸ்சும் தேவை.
விஜய்யின் ஜோதிட கனவு பலிக்குமா?
ஒரு அரசோ அல்லது தனியார் நிறுவனமோ பெரிய ப்ராஜெக்ட்டு களை முன்னெடுக்கும் போது மத்திய மற்றும் மாநில அரசின் சுற்றுச்சூழல் துறைகளிடமிருந்து முறையான அனுமதி பெறவேண்டும். தற்போது அரசு உருவாக்கவிருக்கும் புதிய தலைமைச் செயலகம் 20 லட்சம் சதுர அடியில் அமையவிருப்பதாக விஜய் அரசு சொல்லியிருக்கிறது. இதனை சதுர மீட்டரில் கணக்கிட்டால் 1.85 லட்சம் சதுர மீட்டர் வருகிறது. என்விரோன்மெண்ட் இம்பேக்ட் அசெஸ்மெண்ட்டின் (EIA) விதிகளை ஒப்பிடும்போது, 35,000 சதுர மீட்டர் பரப்பளவு அதிகமாக இருப்பதால் EIA-வின் அனுமதி கிடைப்பது கடினம். ஒருவேளை, புதிய தலைமைச் செயலகத்தின் திட்ட வரைபடம் இறுதி செய்யப்படும் போது, விதிகளில் சொல்லப்பட்டுள்ள அளவுகளை விட கூடுதலாக உள்ள 35,000 சதுர மீட்டர் குறைக்கப்படலாம். இதற்கிடையே, 2006-ல் வெளியிடப்பட்ட EIA நோட்டிஃபிகேசனும் 2011-ல் மத்திய அரசால் ரிலீஸ் செய்யப்பட்ட CRZ-விதிகளும் ஒரு புள்ளியில் இணைக்கப் படுவதால் EIA மற்றும் CRZ விதிகளின்படி அனுமதி பெறாமல் கட்டுமானத்தை தொடங்கக்கூட முடியாது. அந்த வகையில், சம்மந்தப் பட்ட நிலத்தின் சர்வே எண்களை (T.S.No.4593/1, 4593/2, 4593/29, 4593/33, .4592/1 முதல் 4592/85, 7588/2)கணக்கிடும்போது, பட்டினப்பாக்கம் பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் CRZ-II எல்லைக்குள் வருவதாகவே இருக்கின்றன. அதனால், CRZ-II எல்லைக்குள் பட்டினப் பாக்கம் வருவதை மத்தியஅரசு உறுதி செய்தால் விஜய்யின் ஜோதிடக் கனவு பலிக்காது என்கிறார்கள் வருவாய்த்துறையினர்.
புதிய தலைமைச் செயலகம் அமையயுள்ள பட்டினப்பாக்கம் கடலோரப் பகுதியில் 9 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர் அமைப்புகளும், மீனவர்களும் புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் கட்டுவதற்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர். இது குறித்து தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவரும், நெய்தல் மக்கள் கட்சியின் தலைவருமான கு.பாரதியிடம் விசாரித்தபோது, "எங்கள் பகுதியில் புதிய தலைமை செயலகம் கட்டுவது குறித்து விவாதிக்க செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். அதில், எண்ணூர் முதல் நைனார்குப்பம் வரையிலான 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களின் மீனவர் அமைப்புகளும், பொதுநல அமைப்பு களும் கலந்துகொள்கின்றன. குடியிருப்புப் பகுதிகளில் பெரிய திட்டங்களை அரசு கொண்டுவரும்போது, மக்களின் கருத்துக் களைக் கேட்க வேண்டும் என்பது பொதுவிதி. தற்போதைய புதிய தலைமைச் செயலகத்தை மீனவர்களின் வாழ்வாதாரப் பகுதிகளில் கட்டுவதற்கு தீர்மானித்துள்ளது விஜய் அரசு. இதனை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம். புதிய தலைமைச் செயலகம் கட்டத் தீர்மானித் திருக்கும் சர்வே எண்களில், மீனவர்களின் பட்டா நிலங்களும் இருக்கிறது. அதில், எங்களுக்கு வீடு கட்டித் தருவதாகச் சொல்லி கடந்த காலங்களில் அரசு பறித்துக்கொண்டது. ஆனால், வீடுகள் கட்டித் தராமல் அந்த நிலத்தை தனது நிலம் என சொந்தம் கொண்டாடுகிறது அரசு. இதனை மீட்க நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். பட்டினப் பாக்கம், மயிலாப்பூர், சாந்தோம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகள் பள்ளிகள் மண்டலமாக அழைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு இங்கு பள்ளிகள் அதிகம். எங்கள் பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்கும் திட்டத்தை கைவிட விஜய் முன்வர வேண்டும். இல்லையேல், இந்த திட்டத்தை ஒவ்வொரு மீனவரும் தங்களின் உயிரைக் கொடுத்து தடுப்பார்கள்'' என்கிறார் கு.பாரதி.
இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு பா.ம.க. அன்புமணி, அ.ம.மு.க. டி.டி.வி.தினகரன், சி.பி.ஐ. வீரபாண்டியன், பா.ஜ.க. மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)