Politics
புதிய தலைமைச் செயலகம் இப்போது அவசியமற்றது! இபிஎஸ்

புதிய தலைமைச் செயலகம் தேவையற்றது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து...
தற்போது தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், புதிய தலைமைச் செயலகம் தேவையற்றது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாகும்.
இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியில் இருந்த காலங்களில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
விவசாயிகள் பிரச்னை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்னைகள் இருக்கும் இத்தருணத்தில், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது. புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று கூறவில்லை.
தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம். தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது. எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. அரசின் முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பà¯à®¤à®¿à®¯ தலà¯à®®à¯à®à¯ à®à¯à®¯à®²à®à®®à¯ à®à®à¯à®à¯à®µà®¤à®±à¯à®à®¾à® தà¯à®°à¯à®¨à¯à®¤à¯à®à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à® பà®à¯à®à®¿à®©à®ªà¯à®ªà®¾à®à¯à®à®®à¯ à®à®à®±à¯à®à®°à¯à®¯à¯ à®à®à¯à®à®¿à®¯ à®à®¾à®¨à¯à®¤à¯à®®à¯ à®à®¾à®²à¯à®¯à®¿à®²à¯, à®à®¾à®²à®®à¯ à®à®¾à®²à®®à®¾à® வà®à®¿à®¤à¯à®¤à¯ வரà¯à®®à¯ à®®à¯à®©à®µà®°à¯à®à®³à¯, பà¯à®¤à¯à®®à®à¯à®à®³à®¿à®©à¯ à®à¯à®à®¿à®¯à®¿à®°à¯à®ªà¯à®ªà¯à®à®³à¯, பளà¯à®³à®¿à®à®³à¯, வாà®à®© பà¯à®à¯à®à¯à®µà®°à®¤à¯à®¤à¯ நà¯à®°à®¿à®à®²à¯ à®à®©à¯à®±à¯ மிà®à®µà¯à®®à¯ நà¯à®°à¯à®à¯à®à®à®¿à®¯à®¾à®© பà®à¯à®¤à®¿à®¯à®¾à®à¯à®®à¯.
à®à®à®¨à¯à®°à¯à®à¯à®à®à®¿, வாà®à®©à®ªà¯â¦ pic.twitter.com/yVWzfA6Aog
Constructing a new Secretariat is unnecessary now: EPS
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.