Politics
தாராபுரத்தில் தேர்தல் மன்னன் போட்டி
தாராபுரம்;தாராபுரம் தனி தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன்
போட்டியிடுகிறார்.
குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன், 55. இவர், முன்னாள்
முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்
போட்டியிட்ட தொகுதிகளில், அவர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளார்.
இதன் மூலம் சாதனை புத்தகங்களில் இடம் பெற்ற பத்மராஜன், தற்போது
தாராபுரம் தனி தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில்
போட்டியிடுகிறார். இவர், தனது வேட்பு மனுவை, ஆர்.டி.ஓ., பெலிக்ஸ்
ராஜாவிடம் நேற்று அளித்தார்.