Politics
சட்டப்பேரவை மாண்போடு நடக்கிறதா..? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பளிச் பதில்!
சட்டப்பேரவை மாண்போடு நடக்கிறதா என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

சட்டப்பேரவை மாண்போடு நடக்கிறதா? என்ற கேள்விக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் நேற்று பதிலளித்து பேசினார். தமிழ்நாட்டில் தவெக அரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் பொறுப்பு வகிக்கும் காவல்துறையின் மானியக் கோரிக்கை மீது கடந்த வியாழக்கிழமை விவாதம் தொடங்கியது. எதிர்க்கட்சி தலைவரின் கேள்விகளுக்கு திங்கட்கிழமை பதிலளிப்பேன் என கூறிய முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். தொடர்ந்து கடைசி நாளான இன்று விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையின் கடைசி நாள் என்பதால் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
முன்னதாக எ.வ.வேலு பேசுகையில், “மிசா பற்றி முதலமைச்சர் பேசினார். எங்கள் தலைவர் 60 ஆண்டுகள் பொது வாழ்க்கைக்கு சொந்தகாரர். மிசா வில் சிமரங்களை சந்தித்தார். சர்காரிய கமிஷன் குறித்து சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பல முறை பேசி உள்ளார். இறந்தவர்கள் பற்றி பேரவையில் பேச கூடாது ஆனால் அதை நேற்று முதல்வர் பேசினார். மாறன் பற்றி அவையில் பேசியது தேவையில்லாதது. இன்றயை முதலமைச்சருக்கு மாறன் குடும்பம் நெருக்கமான குடும்பம். பல படங்களில் நடித்துள்ளார். முதலமைச்சர் ஆதாரம் இல்லாமல் வெளியில் உள்ள நபர்கள் பற்றி பேசி உள்ளார். முதலமைச்சர் பேசிய விஷயங்களை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என பேசினார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “எங்க எங்க எல்லாம் ஆதராம் இருக்கிறதோ அதை குறிப்பிட்டு தான் முதலமைச்சர் பேசி உள்ளார். சர்காரியா கமிஷனில் கலைஞர் பேமெண்ட் வாங்கியது எல்லாம் இருக்கு. மிசா குறித்து நிறைய பேசி உள்ளது. மிசா வழக்கில் வழிப்பறி வழக்கு உள்ளது கொள்ளை வழக்கு உள்ளது. பல வழக்குகள் உள்ளது எல்லாமே மிசா வழக்கு என கூற முடியாது. பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக தான் மு.க.ஸ்டாலின் கைது என தான் இருக்கும் மிசா குறித்து ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என எந்த குறிப்பும் இல்லை” என பதிலளித்து பேசினார். இதனால் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை காவலர்களை வைத்து திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து அவை காவலர்கள் திமுக உறுப்பினர்களை வெளியேற்றினர்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம் செய்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி பேசினார்.
இதனைத்தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சட்டப்பேரவை மாண்போடு நடக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “நீங்கள் கேட்கும் கேள்வியிலேயே பேரவை மன்போடு நடக்கிறதா?, இல்லையா? என்பது தெரியும்.” என பதிலளித்தார். மேலும் இடைத்தேர்தல் கேள்வி குறித்து மு.க.ஸ்டாலின் பதில் கூறவில்லை. அதேபோல், “சட்டப்பேரவை மாண்போடு நடக்கவில்லை என தமிழக வெற்றிக்கழக அரசருக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட்களே வெளுத்து வாங்கி இருக்கிறார்கள்” என திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் தெரிவித்தார்.
ஜோதிகாவின் 20ம் ஆண்டு திருமண உடையில் இவ்வளவு காதல் குறியீடுகளா? வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!
20ம் ஆண்டு திருமண உறவை கொண்டாடும் விதமாக, சூர்யா - ஜோதிகா மீண்டும் திருமணம்!
இதில் காதலை உணர்த்தும் வகையில் ஜோதிகாவின் உடையில் பல குறியீடுகள் இருந்துள்ளன.
சுவாரஸ்யமான அந்த டீடெய்ல்ஸை இங்கே தெரிஞ்சுக்கோங்க!

